நாக தோஷம் உள்ளவர்களுக்கு திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?


நாக தோஷம் உள்ளவர்களுக்கு திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

⭐ ஒரு ஆணின் ஜாதகத்தில் 2, 4, 5, 7, 8, 12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுப பார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம்.

⭐ ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் நாகதோஷம் இருந்தால் திருமணப் பொருத்தம் செய்யலாம். 

⭐ ஆண் அல்லது பெண், இருவர் ஜாதகத்தில், ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோஷம் இல்லாவிட்டால், அந்த ஜாதகத்தைப் பொருத்தம் செய்யக்கூடாது. 

⭐ அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கேது தசை ஜென்ம நட்சத்திரம் தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது. 

⭐ அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜென்ம நட்சத்திரம் வரும். ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. 

⭐ ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்.

பரிகாரங்கள் :

⭐ வெள்ளைத் துணியை மஞ்சளில் நனைத்து அதில் நாக உருவத்தை வைத்து கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க வேண்டும்.

⭐ செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்தல் வேண்டும்.

⭐ நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும்.

⭐ கருடனை ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.

⭐ ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். 

பரிகார பஞ்ச ஸ்தலங்கள் :

⭐ திருகாளஹஸ்தி. சிமந்திரா (ஆந்திரா) மாநிலத்தில் உள்ளது.

⭐ குடந்தை கீழ்க்கோட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது.

⭐ திருபாம்புரம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.

⭐ கீழ்பெரும்பள்ளம் மாயவரம் அருகில் உள்ளது.

⭐ திருநாகைக் காரோணம். நாகப்பட்டினம் மாவட்டத்தின் மத்தியில் உள்ளது.
ழூ 27 நட்சத்திரங்களின் குணாதிசயங்கள், யோகங்களும் அதன் பலன்களும், கனவு பலன்கள்

Comments