உங்கள் இராசிக்கான பலம் மற்றும் பலவீனம்...!

ஜாதகத்தின் முக்கிய பங்காக இருக்கும் ராசியின் பலம் மற்றும் பலவீனம் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

மேஷ ராசி :

இரண்டாம் இடத்தில் இருப்பது இவர்களின் குணமாக இருக்காது. முதலில் இருந்தே அனைத்தையும் பொறுப்பில் எடுத்து, தலைமை வகிக்க விரும்புவார்கள். இந்தஇன்றைய ராசி பலன்கள் Click here

.
அணுகுமுறை அவர்களை தைரியமுள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றும். நம்பிக்கை மிகுந்த குணம் உடையவர்கள் இவர்கள்.

ரிஷப ராசி :

இவர்கள் நம்பகத்தன்மையுள்ளவராக, பொறுப்புடையவர்களாக, கடின உழைப்பாளியாக, பொறுமைசாலியாக இருப்பார்கள். இவர்கள் ஆழமாக காலு}ன்றியவர்கள் என்பதால் இவர்கள் வாழ்க்கையை நடைமுறைக்குரிய யதார்த்தத்துடன் பார்ப்பார்கள்.

மிதுன ராசி :

இவர்கள் வார்த்தைகளை பயன்படுத்துவதில் அவர்களுக்கென ஒரு வழி இருக்கும். வாழ்க்கையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பார்கள். அதேப்போல் பெற்ற அறிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். அனைவருடன் சுலபமாக பழகவும் செய்வார்கள்.

கடக ராசி :

இவர்கள் தங்கள் மனதை கொண்டு யோசிப்பார்கள். அதனால் இவர்கள் அனைத்து வகையான சு ழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த ஒரு செயல் திட்டத்திற்கும் கடின உழைப்பையும், முயற்சியையும் போடுவார்கள்.

சிம்ம ராசி :

இவர்கள் மனதளவில் மென்மையானவர்களாக இருப்பார்கள். இவர்கள் நம்பிக்கை, லட்சியம், நற்பண்பு, விசுவாசம் மற்றும் ஊக்குவிக்கும் பண்பு உடையவர்கள். இவர்கள் காரியத்தை சிறப்பாக செய்ய அனைவரையும் ஊக்கப்படுத்துவார்கள்.

கன்னி ராசி :

இவர்கள் முடிவெடுக்க முடியாதவர்கள் என்பதால் பல நேரங்களில் அவர்களை புறக்கணித்து விடுவார்கள். பகுப்பாய்வுடன் இருக்கும் இவர்கள், ஒரு விஷயத்தின் ஆணி வேர் வரை செல்வார்கள். இவர்கள் எப்போதுமே நம்பகமான தகவலையே அளிப்பார்கள்.

துலாம் ராசி :

இயற்கையாகவே இராஜதந்திரத்துடன் இருக்கும் இவர்கள், சுலபமாக நண்பர்களைப் பெற்று விடுவார்கள். உயர்ந்த கொள்கைகள், வாழ்க்கையில் லேசான விஷயங்களுக்கு கூட சிறந்த சுவையைக் கொண்டிருக்கும் இவர்கள் வசீகரமானவர்கள்.

விருச்சிக ராசி :

இவர்கள் கூர்ந்து நோக்கக்கூடியவர்கள். ஆழமான உள்ளுணர்வுடன், எந்த ஒரு விளக்கமும் இன்றி, ஒரு சு ழ்நிலை அல்லது பிரச்சனையை அவர்கள் சுலபமாக புரிந்து கொள்வார்கள். கூர்ந்து கவனிப்பதால் அடுத்தவர்களை சரியாக மதிப்பிடுவார்கள்.

தனுசு ராசி :

இவர்கள் மிகுந்த நம்பிக்கை மிகுந்தவர்கள். எப்போதுமே புதிய துணிச்சலான செயல்களைத் தேடி செல்வார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இடம் தேவை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களின் நம்பிக்கை குணம், புதிய அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடச் செய்யும்.

மகர ராசி :

இவர்கள் தங்களின் வேலையில் வைராக்கியம் மிக்கவர்களாகவும், தலைமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஒரு பிரச்சனைக்கு பொறுப்பெடுத்து அதனை தீர்க்க முற்படுவார்கள். இயற்கையாகவே சமயோஜித மற்றும் நடைமுறை புத்தியுள்ளவர்கள்.

கும்ப ராசி :

இவர்கள் பல்வேறு விஷயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு மகிழ்வதை விரும்புவார்கள். நகைச்சுவை உணர்வு மற்றும் பண்புடையவர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை இவர்கள் வெறுப்பார்கள். வாழ்க்கையை புத்திசாலித்தனமாக அணுகும் இவர்கள், எல்லா விஷயங்களையும் புதுமையுடன் அணுகுவார்கள்.

மீன ராசி :

இவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சந்தோஷம் மற்றும் சோகத்தை வைத்தே அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு சு ழ்நிலைக்கும் ஏற்ப இவர்கள் நடப்பதால், அனைவரிடமும் சுலபமாக பழகுவார்கள்.

Comments