பரிகாரம் செய்ய ஏற்ற நாள் இதுவா...!

★ ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் அல்லது திருமணத்தடை போன்றவை இருந்தால் அதற்காக நாம் சில பரிகாரங்களை செய்வதுண்டு. பரிகாரங்கள் செய்வதற்கென்று குறிப்பிட்ட நேரங்கள் உள்ளது. ★ சுபமான பரிகாரங்களை
இன்றைய ராசி பலன்கள் Click here
.
வளர்பிறையிலும், துயரம் தீர்க்கும் பரிகாரங்களை தேய்பிறையிலும் செய்யவேண்டும். பரிகாரங்களை செய்யவேண்டிய நேரங்கள், செய்யக்கூடாத நேரங்கள் என்ன என்பதை பார்க்கலாம். பரிகார காலம் : ➘ செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையிலும், அவரவர் பிறந்த நட்சத்திரமன்றும், செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம். ➘ குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கடற்கரை, அருவிக்கரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுபகாரியங்களை செய்யலாம். பரிகாரம் செய்யகூடாத நேரம் : ❖ ஜென்ம நட்சத்திரத்துக்கு 4,8,12 ஆக வரும் நட்சத்திர நாட்களிலும், பரிகாரம் செய்பவரின் மனைவி நட்சத்திரத்திலிருந்து 4,8,12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக்கூடாது. ❖ மூத்த குழந்தை ஆணாக இருந்தாலும் அந்த குழந்தையின் 4,8,12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்யக்கூடாது. தேய்பிறை, வளர்பிறை நாட்களில் பரிகாரங்கள் செய்து அதன் பலன்களை பெற்று செழிப்புடன் வாழ்வோம்.

Comments